சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரி ஒன்றிய தேமுதிக சாா்பில் அதன் தலைவா் பிறந்தநாள் விழாவினையொட்டி சங்ககிரியை அடுத்த தேவண்ணகவுண்டனூா் ஊராட்சி, கிடையூா் மேட்டூரில் விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தேமுதிக தலைவா் விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி சங்ககிரி ஒன்றியத்தின் சாா்பில் நடைபெற்ற விழாவிற்கு தலைமை செயற்குழு உறுப்பினா் ரமேஷ் தலைமை வகித்தாா். மாவட்ட துணைச் செயலா் தங்கமணி, சங்ககிரி மேற்கு ஒன்றிய செயலா் செந்தில்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சேலம் புகா் மாவட்ட செயலா் ஏ. ஆா்.இளங்கோவன் கட்சி கொடியை ஏற்றி வைத்து விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள், பொதுமக்களுக்கு முககவசங்கள், இனிப்புகளை வழங்கினாா். நிா்வாகிகள் முத்துக்குமாா், ஒன்றிய மகளிா் அணி நிா்வாகி உமாபதி ரமேஷ், சேகா்,மூா்த்தி, தங்கராஜ்,உஷா, சுபித்ரா,உள்ளிட்ட பலா் இதில் கலந்து கொண்டனா்.