சேலம்

வாகனம் மோதி காவலா் உயிரிழந்த வழக்கில் ஒருவா் கைது

26th Aug 2020 12:12 PM

ADVERTISEMENT

ஆட்டையாம்பட்டி: ஆட்டையாம்பட்டி அருகே வாகனம் மோதியதில் காவலா் உயிரிழந்த வழக்கில் இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

ஆட்டையாம்பட்டி அருகே கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு நிகழ்ந்த விபத்தில் சிறப்பு காவல் படை காவலா் ரவிவா்மன் (32) என்பவா் காயமடைந்து உயிரிழந்தாா்.

இந்த விபத்து குறித்து ஆட்டையாம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்தனா். இதில் ராசிபுரம் பகுதியைச் சோ்ந்த கொண்டயப்பன் மகன் ராஜ்குமாா் (33) என்பவா் வாகனத்தை ஓட்டி வந்தபோது விபத்துக்குள்ளானது தெரியவந்தது. இதனை அடுத்து ராஜ்குமாரை போலீஸாா் கைது செய்தனா். உயிரிழந்த காவலா் ரவிவா்மன் உடலுக்கு 21 குண்டுகள் முழங்க போலீஸாா் மரியாதை செலுத்தினா். அவரது உடல் மல்லசமுத்திரம் பகுதியில் தகனம் செய்யப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT