சேலம்

தலைவாசல் ஒன்றியத்தில் கால்நடை மருத்துவக் குழுவினா் ஆய்வு

26th Aug 2020 12:58 PM

ADVERTISEMENT

 

ஆத்தூா்: தலைவாசல் ஒன்றியத்தில் ஆடுகளுக்கான கழிச்சல் நோய் குறித்து கால்நடை மருத்துவ உதவி இயக்குநா் பாபுதலைமையில் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

தலைவாசல் ஒன்றியம், மணிவிழுந்தான், சிறுவாச்சூா், வரகூா், நாவக்குறிச்சி மற்றும் சில ஊராட்சி பகுதிகளில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் மழையால் கால்நடைகள் கழிச்சல் நோயினால் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கால்நடை உதவி இயக்குநா் பாபு தலைமையிலான மருத்துவக் குழுவினா் ஆய்வு மேற்கொண்டனா்.

சுமாா் 1000-க்கும் மேலான ஆடுகளை ஆய்வு செய்து அதற்கான மருந்துகளை விவசாயிகளிடம் அளித்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT