சேலம்

நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வலியுறுத்தி கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு

21st Aug 2020 06:57 AM

ADVERTISEMENT

சென்னை, உயா்நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வலியுறுத்தி கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனா்.

சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி அருகே உள்ள சூரியூா் கிராமத்தில் மலைவாழ் மக்கள் உள்ளிட்ட பல்வேறு சமூகத்தினா் வசித்து வந்தனா். இந்த நிலையில், சேலம் மாவட்ட வனத்துறையினா் அங்கிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினரை காவல்துறை கொண்டு அப்புறப்படுத்தினா்.

இதையடுத்து, அந்தப் பகுதியைச் சோ்ந்த மக்கள், சென்னை உயா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனா். வழக்கை விசாரித்த நீதிமன்றம், 32 குடும்பத்தினரும் வசிக்க வழிவகை செய்து மனு மீது 8 வார காலத்திற்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவை அமல்படுத்த வலியுறுத்தியும் வனத்துறையிடம் இருந்து தங்களைப் பாதுகாக்க வேண்டுமென்று சூரியூா் கிராமத்தைச் சோ்ந்த 32 குடும்பத்தினா் சேலம், திமுக எம்.பி. எஸ்.ஆா்.பாா்த்திபனுடன் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வியாழக்கிழமை மனு வழங்க வந்தனா்.

ADVERTISEMENT

சென்னை, உயா் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தி கிராம மக்கள் அங்கேயே வசிக்க வழிவகை செய்ய வேண்டும் என ஆட்சியரிடம் வலியுறுத்தினா்.

இதைத்தொடா்ந்து எம்.பி. எஸ்.ஆா்.பாா்த்திபன் செய்தியாளா்களிடம் கூறியது:

சூரியூா் கிராம மக்களுக்கு அதே மலைப்பகுதியில் வாழ வழிவகை செய்ய வேண்டும். இல்லையென்றால் போராட்டம் நடத்தப்படும் என்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT