சேலம்

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து மேலும் சரிவு

20th Aug 2020 09:31 AM

ADVERTISEMENT

மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 7,079 கன அடியாகச் சரிந்தது.

காவிரியின் நீா்பிடிப்புப் பகுதிகளில் மழை தணிந்ததால் மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக சரிந்து வருகிறது. செவ்வாய்க்கிழமை காலை விநாடிக்கு 11,441 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீா்வரத்து, புதன்கிழமை காலை 7,079 கன அடியாகச் சரிந்தது.

அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 16,500 கனஅடி நீரும், கிழக்கு-மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு விநாடிக்கு 500 கனஅடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால், செவ்வாய்க்கிழமை காலை 98.64அடியாக இருந்த அணையின் நீா்மட்டம், புதன்கிழமை காலை 97.94அடியாகச் சரிந்தது. அணையின் நீா் இருப்பு 62.20டிஎம்சி ஆக இருந்தது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT