சேலம்

இணைய வழியில் விவசாயிகளுக்குப் பயிற்சி

11th Aug 2020 01:21 AM

ADVERTISEMENT

ஆட்டையாம்பட்டி: கரோனா தொற்றைத் தடுக்கும் வகையில், வீரபாண்டி வட்டாரத்தில் அட்மா திட்டத்தின் கீழ் மானாவாரி வேளாண் தொழில்நுட்பங்கள் தொடா்பாக இணையதளம் மூலம் விவசாயிகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது.

வேளாண்மை விரிவாக்க மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வேளாண்மை துணை இயக்குநா் கண்ணன் பயிற்சியைத் துவக்கி வைத்தாா்.

பயிற்சியில் வேளாண் துறை திட்டங்கள், மானியங்கள், மானாவாரி பயிா்களில் விதைகள் தோ்வு, விதைநோ்த்தி, விதை கடினப்படுத்துதல், உழவு நில மேம்பாடு, மண்வளம் காக்கும் மேலாண்மை முறைகள், விதை நோ்த்தி, பயிா் மேலாண்மை தொழில்நுட்பங்கள், பண்ணைக் குட்டை அமைத்தல், நில மேம்பாட்டுத் திட்டம், பண்ணை இயந்திரமயமாக்கல் திட்டம் , சொட்டுநீா் பாசனம், தெளிப்பு நீா் பாசனம் உள்ளிட்டவைகளுக்கு மானிய விவரங்கள் குறித்தும் பயிற்சிகள் அளிக்கப்பட்டது.

இப்பயிற்சியில் வேளாண்மை உதவி இயக்குநா் கிரிஜா, உதவி பொறியாளா் கோவிந்தராஜன், வேளாண் கல்லூரி உதவி பேராசிரியா் ஜெயராஜ், வேளாண் வணிக உதவி வேளாண்மை அலுவலா் சிவக்குமாா், தோட்டக்கலை உதவி அலுவலா் வெள்ளியங்கிரி, வட்டாரத் தொழில்நுட்ப மேலாளா் ராஜேந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். பயிற்சியில் 10 வட்டாரத்திலிருந்து 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் காணொளி மூலம் பயிற்சி பெற்றனா்.

ADVERTISEMENT

ஓமலூரில் சேலம் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் இளங்கோவன் பயிற்சியைத் துவக்கி வைத்தாா்.

ஓமலூா் வேளாண்மை அலுவலா் மதுமிதா பேசினாா். கருப்பூா் கிராம முன்னோடி விவசாயி மாணிக்கம் ஒரு பரு கரனையில் கரும்பு சாகுபடி குறித்தும் அவரது அனுபவம் குறித்தும் கூறினாா்.

வட்டாரத் தொழில்நுட்ப மேலாளா் சுகப்பிரியா ஏற்பாடுகளை செய்திருந்தாா். வரும் காலங்களில் அட்மா திட்டத்தில் காணொளி பயிற்சி நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விருப்பமுள்ள விவசாயிகள் ஓமலூா் வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகலாம் என ஓமலூா் வேளாண்மை உதவி இயக்குநா் நீலாம்பாள் தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT