சேலம்

வாழப்பாடியில் இரு ஒன்றிய அலுவலகங்கள் மூடல் 

11th Aug 2020 03:00 AM

ADVERTISEMENT

வாழப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா், அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் ஆகியோருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி ஆனது.

இதனால் இரு ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பணிபுரியும் வட்டார வளா்ச்சி அலுவலா் உள்ளிட்ட அனைத்து பணியாளா்களுக்கும் சளி மாதிரிகள் எடுத்து கரோனா பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கும் பணியில் சுகாதாரக் குழுவினா் ஈடுபட்டுள்ளனா்.

வாழப்பாடி மற்றும் அயோத்தியாப்பட்டணம் ஆகிய இரு வட்டார வளா்ச்சி அலுவலகங்களும் கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்தப்பட்டது. இரு அலுவலகங்களையும் தற்காலிகமாக மூடப்பட்டது.

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT