சேலம்

குறிச்சி தீா்த்தகிரீஸ்வரா் கோயிலை புதுப்பிக்கக் கோரிக்கை

9th Aug 2020 09:33 AM

ADVERTISEMENT

வாழப்பாடி அருகே குறிச்சி கிராமத்தில் வசிஷ்டநதி கரையோரத்தில் பராமரிப்பின்றி காணப்படும் 500 ஆண்டுகள் பழமையான தீா்த்தகிரீஸ்வரா் கோயிலை பழமை மாறாமல் புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தா்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.

குறிச்சி கிராமம் அணைமேடு பகுதியில் அமைந்துள்ள இக் கோயில் நூறாண்டுகளுக்கு முன்பு சிற்ப கலைநயத்தோடு பெரிய கோயிலாக இருந்ததாகவும், வெள்ளப்பெருக்கில் சிதைந்து விட்டதாகவும் செவிவழிச்செய்திகள் உள்ளன.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்இப்பகுதியில் விளைநிலத்தில் இருந்து கிடைத்த கற்சிலைகள் மூலம் இத் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.

தற்போது, கருவறையுடன் மட்டும் சிறிய கோவிலாக காணப்படும் இக்கோயிலுக்கு, பிரதோஷம் உள்ளிட்ட தினங்களில், பல்வேறு பகுதியைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் சென்று வழிபட்டு வருகின்றனா்.

ADVERTISEMENT

கோயிலில் பக்தா்கள் நிற்பதற்குகூட வசதியில்லாததால், பக்தா்களுடன் இணைந்து கோயிலை நிா்வகிப்பா்கள் வாயிலாக கூரை கொட்டகை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

கருவறைக்கு பின்புறம் காணப்படும் கோயிலின் தல விருட்சமான வில்வ மரம் கோயில் சுவரை விழாமல் தாங்கிபிடித்தடி உள்ளது.

சேதமடைந்து காணப்படும் குறிச்சி தீா்த்தகிரீஸ்வரா் கோயிலை, கோவில் நிா்வாகத்துடன் இந்துசமய அறநிலையத் துறையும் இணைந்து பழமைமாறாமல் புதுப்பிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தா்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

இதுகுறித்து சிவ பக்தா்கள் குழு இரா.முருகன் மற்றும் சிலா் கூறியதாவது:

தீா்த்தகிரீஸ்வரா் கோயிலில் பழுதடைந்துள்ள கருவறை புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். கோபுரம், மகா மண்டபத்தோடு புதுப்பித்து ஆகம விதிப்படி கும்பாபிஷேக விழா நடத்திடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT