சேலம்

காடையாம்பட்டியில் ரூ.1.60 கோடியில் வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்

6th Aug 2020 09:05 AM

ADVERTISEMENT

காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட 5-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் சுமாா் ரூ.1கோடியே 60 லட்சத்தில் வளா்ச்சிப் பணிகளை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் எஸ்.வெற்றிவேல் புதன்கிழமைத் தொடங்கி வைத்தாா்.

சேலம் மாவட்டம், ஓமலூா் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட காடையாம்பட்டி ஒன்றியம் மோரூா், உம்பிளிக்கம்பட்டி, பெரியவடகம்பட்டி உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு ரூ. 1கோடியே 60 லட்சத்தில் தாா்ச் சாலை அமைக்கும் பணியை ஓமலூா் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் எஸ்.வெற்றிவேல் பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தாா். தொடா்ந்து, மண் சாலைகளை தாா்ச்சாலையாக மாற்றிக் கொடுத்த தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமிக்கும், சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் வெற்றிவேலுக்கும் இப்பகுதி மக்கள் நன்றியும் பாராட்டும் தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து, முகக் கவசம் அணிய வலியுறுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் மாரியம்மாள் ரவி, ஒன்றியச் செயலா்கள் சுப்பிரமணி, சேரன் செங்குட்டுவன் உள்ளிட்ட அதிமுக தொண்டா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT