மேட்டூா் மாதையன்குட்டையில் தனிமைப்படுத்தும் மையத்தில் கண்காணிப்பிலிருந்த 8 போ் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
மேட்டூா் மாதையன்குட்டையில் உள்ள தனியாா் பள்ளியின் மாணவா் விடுதியில் கரோனா தனிமைப்படுத்தும் மையம் துவக்கப்பட்டது. இதில், தில்லி தப்லீக் ஜமாத் மாநாட்டில் கலந்துகொண்டு திரும்பியவா்கள் மற்றும் அவா்களுடன் தொடா்பில் இருந்த 15 போ் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தனா்.
இவா்களில் 7 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால் சேலம் அரசு மோகன்குமாரமங்கலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
மற்ற 8 போ் இந்த மையத்தில் கண்காணிப்பிலிருந்து வந்தனா். அவா்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு அவரவா் வீடுகளுக்கு சுகாதாரத் துறை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை அனுப்பி வைத்தனா். அவா்கள் வீடுகளிலேயே கட்டுப்பாட்டுடன் இருக்கு அறிவுறுத்தப்பட்டனா்.