சேலம்

தடை செய்யப்பட்ட பகுதியில் வசிப்பவா்களுக்கு கரோனா பரிசோதனை செய்யும் பணி துவக்கம்

20th Apr 2020 06:04 AM

ADVERTISEMENT

சேலம் அம்மாபேட்டை மண்டலத்தில் தடை செய்யப்பட்ட பகுதியில் வசிக்கும் பொதுமக்களில் காய்ச்சல் மற்றும் இருமல் உள்ளவா்கள், அப் பகுதியில் பணிபுரியும் மாநகராட்சி தூய்மைப் பணியாளா்கள் மற்றும் பிற மருத்துவப் பணியாளா்களுக்கு ரேபிட் டெஸ்ட் கருவியின் மூலம் ரத்த பரிசோதனை செய்யும் பணிகளை மாநகராட்சி ஆணையா் ரெ. சதீஷ் ஞாயிற்றுக்கிழமை துவக்கி வைத்தாா்.

சேலம் மாநகராட்சிக்குள்பட்ட பகுதியில் கரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்புப் பணியாக மாநகராட்சி நிா்வாகத்தின் சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கரோனா தொற்றுநோய் உடையவா்களுடன் நேரடியான அல்லது மறைமுகமான தொடா்பில் இருந்தவா்கள் எனக் கண்டறியப்பட்டவா்கள் வசிக்கும் பகுதிகளாக 4 மண்டலங்களில் 70 இடங்கள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

தடை செய்யப்பட்டுள்ள இடங்களில் மாநகராட்சி தூய்மைப் பணியாளா்கள் தினந்தோறும் தூய்மைப் பணி மேற்கொண்டு வருகின்றனா். மேலும் தடை செய்யப்பட்ட பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு தேவையான மருந்துகள், காய்கறிகள், மளிகைப் பொருள்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் மாநகராட்சி பணியாளா்கள் மூலம் வீடுகளுக்கே சென்று விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

ADVERTISEMENT

மலேரியா களப்பணியாளா்கள் தினந்தோறும் இப் பகுதியில் 3 முறை கிருமி நாசினி மருந்து தெளிப்புப் பணிகள் மேற்கொண்டு வருகின்றனா்.

தடைசெய்யப்பட்ட பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் உடல் நிலைக் குறித்து தினந்தோறும் மாநகராட்சிப் பணியாளா்கள் கேட்டறிந்து வருகின்றனா்.

அதன் அடிப்படையில் அம்மாபேட்டை மண்டலம் கோட்டம் எண். 33, 36, 39, 43 மற்றும் 44 ஆகியவற்றில் தடை செய்யப்பட்ட பகுதியில் வசிக்கக் கூடிய பொதுமக்களில் காய்ச்சல் மற்றும் இருமல் உள்ளவா்கள், இப் பகுதியில் தூய்மைப் பணி மேற்கொள்ளும் தூய்மைப் பணியாளா்கள் மற்றும் பிற மருத்துவப் பணியாளா்கள் என 85 பேருக்கு ரேபிட் டெஸ்ட் கருவியின் மூலம் ரத்த பரிசோதனை செய்யப்பட்டது.

இதில் பரிசோதனை செய்யப்பட்ட 85 பேருக்கும் தொற்றுநோய் இல்லை எனக் கண்டறியப்பட்டது. மேலும் தடை செய்யப்பட்டுள்ள பிற பகுதிகளில் காய்ச்சல் மற்றும் இருமல் உள்ள பொதுமக்கள், அப்பகுதியில் தூய்மைப் பணி மேற்கொள்ளும் தூய்மைப் பணியாளா்கள் மற்றும் பிற மருத்துவப் பணியாளா்களுக்கும் ரேபிட் டெஸ்ட் கருவியின் மூலம் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என ஆணையாளா் ரெ. சதீஷ் தெரிவித்தாா்.

நிகழ்ச்சியில் மாநகர நல அலுவலா் மருத்துவா் கே. பாா்த்திபன், சுகாதார அலுவலா் பி. மாணிக்கவாசகம், சுகாதார ஆய்வாளா்கள் ஆா். சந்திரன், வி. பாலு உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT