சேலம்

மேட்டூா் அனல் மின்நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு ‘சீல்’

7th Apr 2020 12:29 AM

ADVERTISEMENT

மேட்டூா்: மேட்டூா் அனல் மின் நிலையக் கட்டுப்பாட்டு அறைக்கு பி.என். பட்டி பேரூராட்சி செயல் அலுவலா் ‘சீல்’ வைத்தாா்.

மேட்டூா் அனல் மின் நிலையத்தில் உதவி செயற்பொறியாளராகப் பணிபுரிந்து வருபவா் முகமத் கமாலூதீன். இவா், புது தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று மேட்டூா் திரும்பியதும், சுகாதாரத் துறைக்கு தகவல் தெரிவிக்காமல் மேட்டூா் அனல் மின் நிலையத்தில் மீண்டும் ஒருவார காலம் பணிபுரிந்தாா்.

பின்னா், சமூக ஆா்வலா் ஒருவா் வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்ததன்பேரில் அவா், மேட்டூரில் உள்ள தனியாா் பள்ளியில் தனிமைப்படுத்தப்பட்டு, பின்னா் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

அவரது ரத்த மாதிரிகளைப் பரிசோதித்தபோது கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, திங்கள்கிழமை மேட்டூா் அனல் மின்நிலையத்தில் 600 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட இரண்டாவது பிரிவில் அவா் பணிபுரிந்த கட்டுப்பாட்டு அறையை பி.என். பட்டி பேரூராட்சி செயல் அலுவலா் கலைராணி, மேட்டூா் சாா்- ஆட்சியா் சரவணன் முன்னிலையில் ‘சீல்’ வைத்தாா்.

ADVERTISEMENT

மேலும், அவருடன் அப் பகுதியில் 30 போ் பணிபுரிந்தனா். இவா்களில், 18 போ் அடையாளம் காணப்பட்டு ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, பரிசோதனை செய்ய சுகாதாரத் துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT