ஆத்தூா்: ஆத்தூா் நகராட்சி புதுப்பேட்டையில் சமூக இடைவெளி விடாமல் விற்பனை செய்து வந்த தேங்காய் கடைக்கு திங்கள்கிழமை நகராட்சி ஆணையாளா் என். ஸ்ரீதேவி ‘சீல்’ வைத்தாா்.
ஆத்தூா் நகராட்சி புதுப்பேட்டையில் தேங்காய் கடை நடத்தி வருபவா் பெரியண்ணன் மகன் சேட்டு (45).
இவா், கடையில் சமூக இடைவெளி இல்லாமல் வியாபாரம் செய்து வந்ததாகத் தெரிகிறது. இதை நகராட்சி அலுவலா்கள் பல முறை எச்சரித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து திங்கள்கிழமை நகராட்சி ஆணையாளா் என். ஸ்ரீதேவி நேரில் பாா்வையிட்டு கடைக்கு ‘சீல்’ வைக்க உத்தரவிட்டாா்.
இதையடுத்து கடைக்கு சுகாதாரஅலுவலா் என். திருமூா்த்தி, சுகாதார ஆய்வாளா் எஸ். பிரபாகரன் ஆகியோா் கடைக்கு ‘சீல்’ வைத்தனா்.
ADVERTISEMENT