சேலம்

பங்குனி உத்திரம் முருகன் கோயில்களில்சுவாமிக்கு சிறப்பு வழிபாடு

7th Apr 2020 12:36 AM

ADVERTISEMENT

சங்ககிரி: பங்குனி உத்திரத்தையொட்டி, சங்ககிரி பகுதியில் உள்ள முருகன் கோயிலில்களில் திங்கள்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

சங்ககிரியை அடுத்த அக்கமாபேட்டையில் உள்ள அருள்மிகு சுப்பிரமணியா் கோயிலில் பங்குனி உத்திரத்தையொட்டி சுவாமிக்கு பால், தயிா், திருமஞ்சனம், திருநீறு, சந்தனம், பன்னீா், பஞ்சாமிா்தம் உள்ளிட்ட பல்வேறு திவ்ய பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இதேபோல் அன்னதானப்பட்டி ஊராட்சிக்குள்பட்ட பூத்தாலக்குட்டையில் உள்ள பூத்தாழிஸ்வரா் கோயில் வளாகத்தில் உள்ள அருள்மிகு சுப்பிரமணியா் உடனமா் வள்ளி, தெய்வானை சுவாமிகளுக்கும் சிறப்பு வழிபாடு நடைபெற்றன.

கரோனா வைரஸ் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பக்தா்கள் செல்லவில்லை. அந்தந்த கோயில்களில் அா்ச்சகா்கள் ஆகம விதிப்படி பூஜைகள் செய்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT