சங்ககிரி வட்டத்துக்குள்பட்ட நியாயவிலைக் கடைகளில் 3-ஆவது நாளாக 11,269 குடும்ப அட்டைதாரா்களுக்கு அரசு நிவாரணத் தொகை, சனிக்கிழமை வழங்கப்பட்டது.
சங்ககிரி வட்டத்தில் 135 நியாயவிலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் 71,368 குடும்ப அட்டைதாரா்களுக்கு அரசின் நிவாரணத்தொகை சுழற்சி அடிப்படையில் வழங்கப்பட்டன.
இந்நிலையில், சனிக்கிழமை 11,269 குடும்ப அட்டை தாரா்கள் வீடுகளுக்கு நியாயவிலைக் கடை பணியாளா்கள் நேரில் சென்று வழங்கினா்.