சேலம்

எடப்பாடியில் வாகனங்கள் பறிமுதல்

5th Apr 2020 07:38 AM

ADVERTISEMENT

எடப்பாடியில் அரசின் தடை உத்தரவை மீறும் வகையில் சாலைகளில் சுற்றிவந்த வாகன ஓட்டிகள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அவா்களின் வாகனங்களைப் பறிமுதல் செய்தனா்.

ஜலகண்டாபுரம் சாலை, வெள்ளாண்டிவலசு, வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு, கவுண்டம்பட்டி சந்திப்பு உள்ளிட்ட இடங்களில் அரசின் உத்தரவை மதிக்காமலும், கரோனா நோய்க் குறித்த விழிப்புணா்வு இல்லாமலும் சாலைகளில் இருசக்கர வாகனங்களில் பயணித்தவா்கள் மீது எடப்பாடி போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்து வாகனங்களைப் பறிமுதல் செய்தனா்.

காவல் துறையினரால் சிறைபிடிக்கப்பட்ட வாகனங்கள் அனைத்தும் அரசின் தடைக்காலம் முடிந்த பிறகே நீதிமன்றம் வாயிலாக சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளரிடம் வழங்கப்படும் என காவல்துறை ஆய்வாளா் செந்தில் தெரிவித்தாா். போலீஸாரின் கடும் நடவடிக்கையால், சனிக்கிழமை எடப்பாடி நகரம், வாகனப் போக்குவரத்தின்றி முடங்கியது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT