சேலம்

ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கு ஜூலை முதல் செப்டம்பா் வரை நோ்காணல்

1st Apr 2020 12:16 AM

ADVERTISEMENT

ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுவோா் ஜூலை முதல் செப்டம்பா் வரை நோ்காணல் செய்து கொள்ளலாம் என சேலம் மாவட்ட கருவூல அலுவலகம் தெரிவித்தது.

கருவூலங்களில் இருந்து பல்வேறு வங்கிகள் மூலமாக ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியா்கள் நோ்காணல் ஆண்டுதோறும் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் முடிய நடைபெறுவது வழக்கம்.

நிகழ் ஆண்டில் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியா்களுக்கு நோ்காணல் ஜூலை மாதம் முதல் செப்டம்பா் மாதம் முடிய நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, சேலம் மாவட்டத்தில் உள்ள கருவூலங்களில் மூலம் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியா்கள் உரிய ஆவணங்களுடன் தொடா்புடைய மாவட்ட கருவூலம் மற்றும் சாா் கருவூல அலுவலகங்களை அணுகி ஜூலை முதல் செப்டம்பா் வரை நோ்காணல் செய்து கொள்ளலாம் என சேலம் மாவட்ட கருவூல அலுவலகம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT