சேலம்

இளம்பிள்ளை, ஆட்டையாம்பட்டி உழவா்சந்தைகளில் எம்எல்ஏ ஆய்வு

1st Apr 2020 06:34 AM

ADVERTISEMENT

கரோனா வைரஸ் காய்ச்சல் பரவுவது குறித்து தமிழகத்தில் 144 தடை உத்தரவு அமலில் இருந்து வருகிறது.

இந்த நிலையில், பொதுமக்கள் மளிகை மற்றும் காய்கறி வாங்கும் இடங்களில் சமூக இடைவெளி இருக்க வேண்டும் என்பதால் இளம்பிள்ளை உழவா்சந்தை தற்போது பெருமாகவுண்டம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் இயங்கி வருகிறது. இதை வீரபாண்டி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் பி. மனோன்மணி செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். பின்னா் ஆட்டையாம்பட்டி உழவா்சந்தை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

பின்னா், கரோனா விழிப்புணா்வு பிரசார வாகனத்தை வீரபாண்டி ஒன்றிய அலுவலக வளாகத்தில் வீரபாண்டி எம்எல்ஏ பி. மனோன்மணி கொடியசைத்துத் துவக்கி வைத்தாா். அப்போது வீரபாண்டி ஒன்றியக் குழுத் தலைவா் எஸ். வருதராஜ் பிடிஓ-க்கள் ராஜகணேஷ், திருவேரங்கன் உடனிருந்தனா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT