சேலம்

ரயில் நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்:ரேஷன் அரிசி கடத்தல் நபரை பிடித்து விசாரணை

DIN


சேலம் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது தொடர்பாக ரேஷன் அரிசி கடத்தலில் தொடர்புடைய நபரைப் பிடித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் யு. சுப்பாராவுக்கு வெள்ளிக்கிழமை கடிதம் ஒன்று வந்தது. அதில், எனக்கு மத்திய அரசு உதவி செய்ய வேண்டும். ரயில்வே துறையில் பணி வழங்க வேண்டும். நான் வறுமையில் வாடுகிறேன். என்னுடைய கோரிக்கையை நிறைவேற்றத் தவறினால் சேலம், ஈரோடு, ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் ஆகிய நிலையங்களில் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்படும்.
மேலும் பல்வேறு ரயில்களில்  வெடிகுண்டு வெடிக்கும். இப்படிக்கு மணிவேல் என எழுதப்பட்டிருந்தது. இதுதொடர்பாக ரயில்வே கோட்ட மேலாளர், சேலம் மாநகர காவல் ஆணையாளர் செந்தில்குமாரிடம் புகார் செய்தார்.இதன் பேரில் வெள்ளிக்கிழமை இரவு முதல் சேலம் ரயில் நிலையம் பகுதிகளில் போலீஸார் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூரை சேர்ந்த மணிவேல் (50) என்பவரை சேலம் ரயில் நிலைய போலீஸார் அழைத்து வந்து விசாரணை செய்து வருகின்றனர்.
இவர் ரேஷனில் அரிசி மூட்டைகளை  வாங்கி விற்று வருகிறார். மேலும் ரேஷன் அரிசி கடத்தி விற்றதாக 3 வழக்குகள் உள்ளன. இது தவிர குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் ஒரு முறை சிறைக்கும் சென்று வந்துள்ளார்.
விசாரணையில், நான்  மிரட்டல் கடிதம் அனுப்பவில்லை, தன்னை பிடிக்காத யாரோ மிரட்டல் கடிதம் அனுப்பி இருக்கலாம் எனத் தெரிவித்தார். போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் ஜங்ஷன் ரயில் நிலைய காவல் துணை கண்காணிப்பாளர் பாபு தலைமையில் ஆய்வாளர் இளவரசி, போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமகள்.. பூஜா ஹெக்டே!

சன் ரைசர்ஸுக்கு எதிராக ஆர்சிபி பேட்டிங்!

‘ஹீராமண்டி’ சிறப்புக் காட்சியில் பிரக்யா!

பாஜகவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்! | செய்திகள்: சிலவரிகளில் | 25.4.2024

விஷாலின் ரத்னம்: இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள்!

SCROLL FOR NEXT