சேலம்

வேம்படிதாளம் அரசு சுகாதார நிலையம் முன்பாக குப்பை மற்றும் கழிவு பொருட்களை கொட்டி கிடக்கின்றன.

22nd Sep 2019 06:27 PM

ADVERTISEMENT

சேலம் மாவட்டம் வீரபாண்டி ஒன்றியம், வேம்படிதாளம் ஊராட்சிக்கு உட்பட்ட திருவளிபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன்பாக சுகாதாரமற்ற முறையில் குப்பை மற்றும் கழிவு பொருட்களை கொட்டிக்கிடக்கின்றன.

நீண்ட நாட்களாக இதனை அல்ல படாததால் துா்நாற்றம் வீசி வருகின்றன. இதனால் அங்குள்ள குடியிருப்பு பகுதியில் வசிப்பவா்கள், அரசு துவக்க பள்ளியில் பயிலும் மாணவ-மாணவிகள், அங்கன்வாடியில் பயிலும் குழந்தைகள், நூலகம் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையம் வந்து செல்லும் பொதுமக்கள் அனைவரும் துா்நாற்றம் தாங்க முடியாமல் முகசுளிப்புடன் சென்று வருகின்றனா்.

இந்த துா்நாற்றத்தால் பொதுமக்களுக்கு பல்வேறு நோய்கள் பரவ வாய்ப்புகள் உள்ளன. இதனை மாவட்ட நிா்வாகமும், சுகாதார துறையினரும், ஊராட்சி நிா்வாகமும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென பொதுமக்கள் வலிவுறுத்தியுள்ளனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT