சேலம்

தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 200 பேருக்கு வேலை

22nd Sep 2019 04:00 AM

ADVERTISEMENT


மேட்டூரில் நடைபெற்ற தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 200 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மூலம் தமிழ்நாடு நகர்புற மற்றும் கிராமப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில், தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது. முகாமை மேட்டூர் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் செம்மலை தலைமையில் மாநிலங்களவை உறுப்பினர் என். சந்திரசேகரன் துவக்கி வைத்தார்.
இளைஞர்கள், இளம்பெண்கள் 500-க்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்றனர். தமிழகம் முழுவதிலும் இருந்து 30 நிறுவனங்கள் முகாமில் பங்கேற்றன. பங்கேற்ற 200 நபர்களுக்கு வேலைக்கான நியமன உத்தரவு வழங்கப்பட்டது. முகாமில் அதிமுக தகவல் தொழில்நுட்ப நிர்வாகி நிர்மல் ஆனந்த், மேட்டூர் நகர கூட்டுறவு சங்க இயக்குநர் சாதிக் அலி மகளிர் திட்ட இயக்குநர் செல்வகுமார், உதவி இயக்குநர்கள் சாகுல் அமீது, விஜயகுமார், சுந்தரம் வெற்றிச்செல்வன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT