மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 17 ஆயிரம் கன அடியாக சரிந்தது.
கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்பிடிப்புப் பகுதியில் பெய்து வரும் மழை தணிந்தது.
இதனால் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளிலிருந்து திறக்கப்படும் உபரிநீரின் அளவும் குறைக்கப்பட்டது.
கர்நாடக அணைகளின் உபரிநீர் திறப்பு குறைக்கப்பட்டதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் படிப்படியாகக் குறைந்து வந்தது. திங்கள்கிழமை மாலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 17,000 கனஅடியாக சரிந்தது.
அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்காக நொடிக்கு 16,000 கன அடியாகக் குறைக்கப்பட்டது. கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு நொடிக்கு 900 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டி.எம்.சி. யாகவும் இருந்தது.