சேலம்

மூன்று மகள்களுடன் தாய் தீக்குளிக்க முயற்சி  

17th Sep 2019 10:18 AM

ADVERTISEMENT

கணவரை இழந்ததால் பணப்பலன்கள் வழங்கக் கோரி தாய் உள்பட மூன்று மகள்கள் ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றனர்.
 சேலம் கிச்சிப்பாளையம் எஸ்.எம்.சி காலனி பகுதியைச் சேர்ந்தவர் செல்வமேரி. இவருக்கு ஞானமணி, பிரியா, மஞ்சு என 3 மகள்கள் உள்ளனர். இதில் பிரியாவிற்கு திருமணமாகிவிட்ட நிலையில் திங்கள்கிழமை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்துக்கு செல்வமேரி, ஞானமணி, பிரியா மற்றும் அவரின் கணவர் தங்கமணி, மஞ்சு ஆகியோர் வந்தனர்.
 அப்போது திடீரென அவர்கள் மறைத்த வைத்திருந்த மண்ணெண்ணையை உடலில் ஊற்றி செல்வமேரி, ஞானமணி, பிரியா, மஞ்சு ஆகியோர் தீக்குளிக்க முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் இதைக் கண்டு அவர்களை தடுத்து நிறுத்தி தண்ணீரை ஊற்றினர்.
 பின்னர், செல்வமேரி போலீஸாரிடம் கூறியதாவது: எனது கணவர் ஜோசப் சேட்டு மாநகராட்சியில் கொண்டலாம்பட்டி துப்புரவுப் பணியாளராகப் பணியாற்றி வந்தார். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் அவர் இறந்துவிட்டார். ஆனால் பணப்பலன்கள் எதுவும் வழங்கவில்லை. இதனால், பணப் பலன்களை வழங்கக் கோரி மாநகராட்சியில் பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் பணப் பலன்களை வழங்க வறுமையில் வாடிவரும் எங்களிடம் லஞ்சம் கேட்கின்றனர் என்றார். இதையடுத்து நகர போலீஸார் 4 பேரை காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரித்து வருகின்றனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT