தம்மம்பட்டி அருகே அனுமதியின்றி ஜல்லிக்கட்டு நடத்தியது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சேலம் மாவட்டம், தம்மம்பட்டியை அடுத்துள்ள செந்தாரப்பட்டி அருகே மண்மலை பாலக்காட்டில், சனிக்கிழமை அன்று மண்மலை மலையடிவார மைதானத்தில் வாடிவாசல் அமைக்கப்பட்டு, காலை 8.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை ஜல்லிக்கட்டு நடைபெற்றது. 50 காளைகள் கலந்துகொண்டன. இந் நிலையில், அனுமதியின்றி ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டதாக, மண்மலை கிராம நிர்வாக அலுவலர் ஆனந்த் அளித்த புகாரின் பேரில், ஜல்லிக்கட்டு நடத்திய விழாக்குழுவைச் சேர்ந்த பாம்மையன் (58), ஜெயராமன் (45), ரவி (35), விஜயன் (25) ஆகிய நான்கு பேர் மீது தம்மம்பட்டி போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.