சேலம்

பெண் பாலியல் வன்கொடுமை: நான்கு பேர் கைது

17th Sep 2019 10:17 AM

ADVERTISEMENT

வாழப்பாடி அருகே பெண்ணை பாலியல் வன் கொடுமை செய்த வழக்கில் நான்கு இளைஞர்களை ஏத்தாப்பூர் போலீஸார், திங்கட்கிழமை கைது செய்தனர். தலைமறைவான இருவரை தேடி வருகின்றனர்.
 வாழப்பாடி அடுத்த சின்னமநாயக்கன்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த 35 வயதுடைய திருமணமான பெண், மன்னாயக்கன்பட்டி கிராமத்திலுள்ள நெகிழி குடங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரும் அதே நிறுவனத்தில் பணிபுரியும் தினேஷ் (25) என்ற இளைஞரும் நெருங்கிப் பழகியுள்ளனர்.
 இந்த நிலையில், திங்கள்கிழமை காலை இருவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் நெய்யமலை அடிவாரத்திலுள்ள வனப் பகுதிக்குள் சென்றுள்ளனர். அப்போது அங்கு சென்ற இளைஞர்கள் 6 பேர், மலைப் பாதையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தினேஷின் மோட்டார் சைக்கிளில் இருந்த குடும்ப அட்டையை எடுத்துக் கொண்டனர்.
 பெண்ணுடன் வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த தினேஷை மிரட்டிய அந்த கும்பல், அவருடன் வந்த பெண்ணை வனப்பகுதிக்குள் கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்று பாலியல் வன் கொடுமை செய்தனர்.
 இதனால் பதறிப்போன தினேஷ், இதுகுறித்து அருகில் இருந்தவர்களிடம் நடந்ததைக் கூறி அழைத்து வந்து கூச்சலிட்டதால், பெண்ணை வனப்பகுதியிலேயே விட்டுவிட்டு, இந்த இளைஞர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். பாதிக்கப்பட்ட இளம்பெண் கொடுத்த புகாரின் பேரில், வாழப்பாடி போலீஸ் டி.எஸ்.பி., சூரியமூர்த்தி, ஏத்தாப்பூர் காவல் ஆய்வாளர் விவேகானந்தன், வாழப்பாடி அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் உமாமகேஸ்வரி ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீஸார், பெண்ணை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்குப் பதிவு செய்து, இடையப்பட்டி அழகேசன்(29), சேதுபதி(23), தாண்டானுôர் கோகுல்(21), வெங்கடேசன் (23). ஆகிய நான்கு பேரையும் கைது செய்தனர்.
 மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய தலைமறைவான தாண்டானுôர் கலையரசன், இடையப்பட்டி மணிகண்டன் ஆகிய இளைஞர்கள் இருவரையும் ஏத்தாப்பூர் போலீஸார் தேடி வருகின்றனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT