மேட்டூர் நீர்த்தேக்கப் பகுதியில் உள்ள பண்ணவாடி பரிசல் துறையில் படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
மேட்டூர் நீர்தேக்கப் பகுதியில் சேலம் மாவட்டம், பண்ணவாடி பரிசல்துறையிலிருந்து தருமபுரி மாவட்டம், நாகமரை பரிசல் துறைக்குச் சென்று வருவதற்கு படகு போக்குவரத்து உள்ளது.
சேலம் மாவட்டம், கொளத்தூர் சுற்றுவட்டாரப் பகுதி வியாபாரிகளும், பொதுமக்களும் தருமபுரி மாவட்டம் நெருப்பூர், ஏரியூர், பென்னாகரம் செல்ல படகு மூலம் காவிரியை கடந்து சென்று வந்தனர்.
இதேபோல் அப்பகுதியில் உள்ள மக்களும் மேட்டூர், கொளத்தூருக்கு படகு மூலம் காவிரியைக் கடந்து சென்று வந்தனர். திங்கள்கிழமை படகில் ஏற்பட்ட கோளாறு காரணமாக படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் பொதுமக்களும் பள்ளி, கல்லூரி மாணவ மாணவியரும் கடும் அவதிக்குள்ளானார்கள். படகின் என்ஜின் பழுது நீக்கிய பிறகே மீண்டும் படகு போக்குவரத்து துவங்கும்.