சேலம்

சொத்துத் தகராறில் நிகழ்ந்த கொலை வழக்கு: குற்றவாளி கைது

17th Sep 2019 10:18 AM

ADVERTISEMENT

குடும்பச் சொத்துத் தகராறில் ஏற்காடு பாஜக ஒன்றியத் துணைத் தலைவரை வெட்டிக் கொலை செய்த குற்றவாளியை ஏற்காடு காவல் துறையினர் திங்கள்கிழமை கைது செய்தனர்.
 ஏற்காடு ஒன்றியம், கொளகூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அழவரா கவுண்டர்- கரியம்மாள் தம்பதியின் மகன் சின்ராஜ் (45). இவர், ஏற்காடு பாஜக ஒன்றியத் துணைத் தலைவராக உள்ளார். அழவராவின் தம்பி சென்றாயகவுண்டர். சகோதரி வெள்ளையம்மாள்.
 இவர்களது குடும்பச் சொத்தை வெள்ளையம்மாள் மகன் ராமகிருஷ்ணன் பயன்படுத்தி வந்த நிலையில், ஊர் பெரியவர்கள் முன்னிலையில் குடும்பச் சொத்தை ஒப்படைக்குமாறு சின்ராஜ் கேட்டுக் கொண்டார். ராமகிருஷ்ணனும் ஒப்புக் கொண்டார். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை சின்ராஜ், கொளகூர் கிராமத்தில் உள்ள ஒரு தேநீர் கடையில் தேநீர் அருந்திக் கொண்டிருந்தார்.
 அப்போது அங்கு வந்த ராமகிருஷ்ணனின் மகன் மணிகண்டன் (25) தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சின்ராஜை வெட்டினார். இதில், பலத்த காயமடைந்த சின்ராஜ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து, ஏற்காடு போலீஸார் வழக்குப் பதிந்து நாகலூர் கிராமத்தில் இருந்த மணிகண்டனை திங்கள்கிழமை கைது செய்தனர்.
 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT