சேலம்

நாகியம்பட்டியில் ஆரோக்கிய மாதா கோயில் தேர்த் திருவிழா

10th Sep 2019 10:43 AM

ADVERTISEMENT

தம்மம்பட்டி அருகே நாகியம்பட்டியில் இலங்கை அகதிகள் முகாம் அருகே  வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா ஆலயத்தில் தேர்த்திருவிழா ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது .
ஆரோக்கிய மாதா பிறந்த நாளையொட்டி வருடந்தோறும்
செப். 8 ஆம் தேதி இரவு தேர்த் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். கடந்த 1 ஆம் தேதி முதல் கொடியேற்றத்துடன், நவநாள் திருப்பலியுடன் விழா துவங்கியது.
ஞாயிற்றுக்கிழமை இரவு தேர்த் திருவிழா நடைபெற்றது. மின்சார விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் ஆரோக்கிய மாதாவை பக்தர்கள் இழுத்து வந்தனர். நாகியம்பட்டியிலிருந்து தம்மம்பட்டி வரை சென்ற தேர் திரும்பவும், நாகியம்பட்டிக்குச் சென்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT