சேலம்

வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி மனு

7th Sep 2019 09:47 AM

ADVERTISEMENT

ஏத்தாப்பூர்  பேரூராட்சிக்குள்பட்ட  அண்ணாநகர் பகுதியில்  அரசு புறம்போக்கு நிலத்திலுள்ள 50 வீடுகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக்கோரி அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள்,  பெத்தநாயக்கன்பாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை கோரிக்கை மனு அளித்தனர்.
ஏத்தாப்பூர் பேரூராட்சியில்  தும்பல் பிரதான சாலையில் அண்ணாநகர் குடியிருப்பு பகுதி அமைந்துள்ளது. இப் பகுதியிலுள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் 30 ஆண்டுகளுக்கு மேலாக வீடுகட்டி குடியிருந்து வருகின்றனர்.  வீட்டுமனைப் பட்டா இல்லாதாதல், மின் இணைப்பு பெறுவதிலும், அரசின்  பசுமை வீடு மற்றும் தொகுப்பு வீடுகள் உள்ளிட்ட அரசு சலுகைகளை பெறுவதற்கும் வழியின்றி தவித்து
வருகின்றனர்.
எனவே,  அண்ணாநகர் பகுதியில் அரசு புறம்போக்கு நிலத்திலுள்ள வீடுகளுக்கு, தமிழக  முதல்வரின் திட்டத்தின்கீழ் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்து,  இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பெத்தநாயக்கன்பாளையம் வட்டாட்சியர் அன்புக்கரசியிடம் வெள்ளிக்கிழமை   மனு அளித்தனர்.  நிலத்தை அளவீடு செய்து தகுதிவாய்ந்த நபர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதாக வருவாய்த் துறையினர் தெரிவித்தனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT