சேலம்

மேட்டூர் அணை உபரிநீர் மூலம் ஏரிகளை நிரப்ப வேண்டும்: ஜி.கே.மணி

7th Sep 2019 09:47 AM

ADVERTISEMENT

மேட்டூர்  அணை உபரிநீர் மூலம் தலைவாசல்  வரை உள்ள அனைத்து ஏரிகளையும் நிரப்ப வேண்டும் என பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
ஆத்தூரை  அடுத்துள்ள கொத்தாம்பாடி தனியார் திருமண மண்டபத்தில் பாமக செயற்குழுக் கூட்டம் மாவட்டச் செயலாளர் எம்.பி.நடராஜன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில துணைப் பொதுச்செயலாளர் பி.என்.குணசேகரன் வரவேற்றுப் பேசினார்.சிறப்பு அழைப்பாளராக கட்சித் தலைவர் ஜி.கே.மணி கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:  உணவுப் பற்றாக்குறை ஏற்படும் நேரம் வந்துவிட்டது. ஆகையால் மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும். காவிரி உபரிநீர் மூலம் சேலம் கிழக்கு மாவட்டத்தில் உள்ள தலைவாசல் வரை அனைத்து ஏரிகளையும் நிரப்ப முதல்வர் நடவடிக்கை எடுக்கவேண்டும். முதல்வர் வெளிநாட்டு முதலீட்டாளர்களை கொண்டுவர எடுத்து வரும் நடவடிக்கையை பா.ம.க. வரவேற்கிறது. இதனைக் கொச்சைப்படுத்தி பேசுவதை எதிர்க்கட்சிகள் நிறுத்தவேண்டும். இடைத்தேர்தல் கூட்டணி குறித்து தேர்தல் தேதி அறிவித்த பின்னர் அறிவிக்கப்படும் என்றார். அப்போது,  பாமக அவைத் தலைவர் கண்ணன், ஒன்றியச் செயலாளர் பச்சமுத்து, நகரச் செயலாளர் மணிகண்டன், இரா. பார்த்திபன் உள்ளிட்ட  மாவட்ட, ஒன்றிய, நகரநிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT