சேலம்

பாஜக மாவட்ட தலைவரின் கார் கண்ணாடி உடைப்பு

7th Sep 2019 09:46 AM

ADVERTISEMENT

சேலம்  நகரில் பா.ஜ.க. மாவட்ட தலைவரின் கார் கண்ணாடி மர்ம நபர்களால் உடைக்கப்பட்டது.
பா.ஜ.க. சேலம் மாநகர மாவட்டத் தலைவராக இருப்பவர் ஆர்.பி.கோபிநாத். இவர் புதன்கிழமை இரவு சேலம் நகரில் திருவள்ளுவர் சிலைப் பகுதியில் தனது நண்பர்களுடன் காரில் சென்றுள்ளார். பின்னர் காரை அங்குள்ள உணவகம் அருகே நிறுத்திவிட்டு கடைக்குச் சென்று திரும்பி வந்து பார்க்கையில் காரின் கண்ணாடி உடைக்கப்பட்டு, காரினுள்  டிபன்பாக்ஸ் வைக்கப்பட்டிருந்த பை திருட்டுப்போனது தெரியவந்தது. 
இதுகுறித்து கோபிநாத் சேலம் நகரக் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT