சேலம்

ஜாக்டோ - ஜியோ சார்பில் ஆர்ப்பாட்டம்

7th Sep 2019 09:46 AM

ADVERTISEMENT

ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பின்  சங்ககிரி வட்டக் கிளை சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி சங்ககிரி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகம் முன் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
ஆர்பாட்டத்துக்கு வட்ட ஒருங்கிணைப்பாளர் கே.ஏ.பசுபதி தலைமை வகித்தார். சமுதாயப் பகுதி சுகாதாரச் செவிலியர் சங்கத்தின் மாநிலச் செயலர் பி.மனோன்மணி,  தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத் தலைவர் எஸ்.ஏ.சங்கர்,  தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றச் செயலர் ஆர்.முருகன்,  தமிழக ஆசிரியர் கூட்டணியின் சங்ககிரி கல்வி மாவட்டச் செயலர் எம்.ஆறுமுகம், மாவட்ட துணைத் தலைவர் எஸ்.சந்தோஷ்குமார், வட்டச் செயலர் ஆர்.காயத்ரி  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகி நல்லம்மாள் நன்றி கூறினார். 
புதிய தேசிய கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கையை  முற்றிலுமாக திரும்பப் பெற வேண்டும்.  ஜாக்டோ - ஜியோ போராட்டத்தால் பாதிக்கப்பட்ட 5 ஆயிரத்துக்கும்  மேற்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், அரசுப் பணியாளர்கள்  மீதான அனைத்து நடவடிக்கைகளையும் கைவிட வேண்டும்.  தொடக்கக் கல்வித் துறையைப் பாதிக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள அரசாணை 145 ஐ  உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். அரசாணை எண் 101 ஐ திரும்பப் பெற்று தொடக்கக் கல்வித்துறை தனித்துவத்தோடு செயல்பட அனுமதிக்க வேண்டும்.  புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
மகுடஞ்சாவடியில்...
மகுடஞ்சாவடி வட்டார தொடக்க கல்வி அலுவலகம் முன் தமிழக ஆசிரியர் கூட்டணித் தலைவர் ஆனந்தராஜ் தலைமையில் 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அரசாணை 145 ஐ ரத்து செய்ய வேண்டும்,  குற்ற வழக்குளை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில்  தமிழக தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலத் தலைவர் தமிழரசன், பொருளாளர் சதீஷ்குமார், மாநில பொருளாளர் சந்திரசேகர் மற்றும் தேவன், ஜான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT