சேலம்

ஏற்காட்டில் ஆட்சியர் ஆய்வு

7th Sep 2019 09:50 AM

ADVERTISEMENT

ஏற்காட்டில்  ஊராட்சி ஒன்றியம் சார்பில் ரூ. 40 லட்சம் செலவில் நடைபெறும் உணவு கழிவின் மூலம் மின் உற்பத்தி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார்.
ஏற்காடு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் சுற்றுலாப் பகுதியில் உள்ள  உணவு விடுதி கழிவுகளை தினசரி பெற்று  மின் உற்பத்திக் கலனில் சேர்க்கப்பட்டு வருவதை ஆட்சியர் பார்வையிட்டார். பின்னர், சேலம் தனியார் கல்வி நிறுவனம் ஏற்காட்டில்  புதிதாக கட்டடம் கட்டுவதற்கு அனுமதி கேட்டுள்ள இடத்தையும்,   அண்ணா பூங்கா மற்றும்  பட்டு மையத்தையும் ஆட்சியர் பார்வையிட்டார். அப்போது வட்டார வளர்சி அலுவலர் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT