சேலம்

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.75.55 லட்சம் மோசடி: 5 பேர் மீது வழக்குப் பதிவு

7th Sep 2019 09:49 AM

ADVERTISEMENT

சேலத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.75.55 லட்சம் பணம் மோசடி செய்ததாக 5 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 
சேலம் அம்மாப்பேட்டை  வித்யா நகர் பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணனின் மகன் கோபி.  இவர் கடந்த 2003 ஆம் ஆண்டு அரசு வேலைக்கு முயற்சித்துள்ளார். அப்போது அம்மாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த கார்த்திக் அஸ்வினுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது கார்த்திக் அஸ்வின் தனக்கு தெரிந்த அதிகாரிகள் மூலம் பொதுப்பணித் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறவே,  கோபி மற்றும் அவரைச் சார்ந்த 12 பேர் ரூ.75.55 லட்சம் பணத்தை கார்த்திக் அஸ்வின் மற்றும் அவரது கூட்டாளிகளான யூஜின் ஷெரிப்,  ரியாஸ் அகமது,  அவரது மனைவி ஷப்னம், மகாலட்சுமி ஆகியோரிடம் கொடுத்துள்ளனர்.  
 ஆனால் கோபி உள்ளிட்ட 12 பேருக்கும் அரசு வேலை வாங்கித் தராமல் ஏமாற்றி வந்ததுடன், வாங்கியப் பணத்தைத் திரும்பிக் கொடுக்காமல் மோசடி செய்யததாக தெரிகிறது. இதுகுறித்து கோபி சேலம் முதன்மை நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அதனை விசாரித்த நீதிமன்றம் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை  எடுக்க  சேலம் மத்தியக் குற்றப்பிரிவு போலீஸாருக்கு உத்தரவிட்டது. அதன்படி கார்த்திக் அஸ்வின் உள்ளிட்ட 5 பேர் மீதும் ரூ.75.55 லட்சம் பண மோசடி செய்ததாக மத்தியக் குற்றப்பிரிவு ஆய்வாளர் விஜயகுமாரி தலைமையிலான போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT