சேலம்

விவசாயி கொலை: மகன்கள் இருவர் கைது

4th Sep 2019 09:24 AM

ADVERTISEMENT

சொத்து தகராறில் விவசாயியைக் கொலை செய்த மகன்கள் இருவரை போலீஸார் கைது செய்தனர்.
 சேலம் கன்னங்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி முனுசாமி (55). இவருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி ராஜம்மாள் கன்னங்குறிச்சி, மன்னார்பாளையம் சாலையில் வசித்து வருகிறார். இவருக்கு சக்திகுமார் (30) மற்றும் தாமோதரன் (27) என்ற மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். முனுசாமி இரண்டாவது மனைவி சபிதாவுடன் அன்னதானப்பட்டி பகுதியில் வசித்து வந்தார்.
 கன்னங்குறிச்சி அருகில் பொட்டுக்காரன் சமாதி பகுதியில் உள்ள முனுசாமியின் 80 சென்ட் நிலத்தில் ராஜம்மாள் மற்றும் அவரது பிள்ளைகள் விவசாயம் செய்து வந்தனர். கடந்த சில தினங்களுக்கு முன் அந்த நிலத்தை விற்பனை செய்வதற்காக முனுசாமி ஏற்பாடுகள் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் முனுசாமிக்கும், முதல் மனைவி குடும்பத்தினருக்கும் இடையே தகராறு இருந்து வந்ததாம். இந்த நிலையில், திங்கள்கிழமை நிலத்தை பார்வையிட வந்த முனுசாமியிடம், அவரது மகன்கள் சக்திகுமார், தாமோதரன் ஆகியோர் வாக்குவாதம் செய்து, அவரை கல்லால் தாக்கி கொலை செய்துவிட்டு தலைமறைவாயினர். இந்த நிலையில், தலைமறைவான சக்திகுமார், தாமோதரனை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT