சேலம்

வாசற்படி இல்லாத வேளாண்மை அலுவலகம்: தடுமாறும் விவசாயிகள்

4th Sep 2019 09:50 AM

ADVERTISEMENT

வாழப்பாடி வேளாண்மை அலுவலகத்துக்கு செல்வதற்கு, படிக்கட்டுக்கும், வாசற்படிக்கும் இடையே இணைப்புப் பலகை இல்லாததால், இடைவெளியைத் தாண்டிச் செல்ல முடியாமல் விவசாயிகள் தடுமாறி வருகின்றனர்.
 வாழப்பாடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட 20 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளும், வாழப்பாடி மற்றும் பேளூர் பேரூராட்சிப் பகுதியைச் சேர்ந்த விவசாயிகளும், விதைகள், இடுபொருட்கள் வாங்கவும், அரசு சலுகைகளுக்கு விண்ணப்பிக்கவும், ஆலோசனை மற்றும் பயிற்சிகள் பெறும் வாழப்பாடி வேளாண்மை அலுவலகத்திற்கு வந்து செல்கின்றனர். தற்போது பரவலாக மழை பெய்து வருவதால் வேளாண் அலுவலகத்துக்கு வந்து செல்லும் விவசாயிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.
 வாழப்பாடி ஊராட்சி ஒன்றிய வளாகத்திலுள்ள வேளாண்மைத்துறை அலுவலகத்துக்குள் செல்வதற்கு, படிக்கட்டுக்கும், வாசற்படிக்கும் இடையே பல மாதங்களாக இணைப்புப் பலகை இல்லாததால், இடைவெளியைத் தாண்டிச் செல்ல முடியாமல் விவசாயிகள் தடுமாறி வருகின்றனர். விதை, இடுபொருட்கள் மூட்டைகளை எடுத்துச் செல்வதில் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
 எனவே, இணைப்புப் பலகை அமைத்து வாசற்படியை சீரமைப்பதற்கு, வாழப்பாடி வேளாண்மைத் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகளிடையே கோரிக்கை எழுந்துள்ளது.
 
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT