சேலம்

பிரதமரின் வீடு கட்டும் திட்டம்: மானியம் பெற தகுதியுடைய பயனாளிகள் விண்ணப்பிக்கலாம்

4th Sep 2019 09:49 AM

ADVERTISEMENT

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.2.10 லட்சம் மானியம் பெறுவதற்கு தகுதியுடைய பயனாளிகள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் தெரிவித்தார்.
 இதுகுறித்து அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: 
 சேலம் மாவட்டத்தில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின்கீழ் ரூ. 2.10 லட்சம் மானியம் பெறுவதற்கு தகுதியான பயனாளிகள் விண்ணப்பித்து பயன்பெறலாம். இடைத்தரகர்களை நம்பி பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். 
 தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில், சேலம் மாவட்டத்தில் பயனாளிகள் தேர்வு செய்யப்படுகின்றனர். தகுதியான பயனாளிகள், தாங்கள் வசிக்கும் இடத்தில் 300 சதுரடி பரப்பில் கான்கிரீட் வீடு கட்டிக் கொள்ள வேண்டும். அதற்கு மானியமாக ரூ.2.10 லட்சம் பயனாளியின் வங்கிக் கணக்கில் நான்கு தவணைகளாக நேரடியாக வரவு வைக்கப்படும். 
 மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி எல்லைக்கு உள்பட்ட பகுதியில் சொந்த இடத்தில் குடிசை வீடு, ஓட்டு வீடு, அட்டை வீடு அல்லது காலி மனை வைத்திருப்பவராக இருக்க வேண்டும். பயனாளியின் பெயரில் பட்டா அல்லது பத்திரம் வைத்திருக்க வேண்டும். பயனாளிகள் குடும்ப ஆண்டு வருவாய் ரூ.3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். பயனாளியின் பெயரில் அல்லது பயனாளியின் குடும்பத்தாரின் பெயரில் வேறு வீடு இருக்கக் கூடாது. இதற்குத் தகுதி வாய்ந்த நபர்கள் குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வங்கிக் கணக்குப் புத்தகம், பட்டா, பத்திரம் ஆகியவற்றின் நகல்களை அளிக்க வேண்டும்.
 விண்ணப்பம் பெற தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சேலம் கோட்டம், 3/2 நாரயணசாமி தெரு, பெரமனூர், சேலம்-7, என்ற முகவரியில் இயங்கும் கோட்ட அலுவலகத்தை நேரில்அணுகியோ அல்லது 0427 2318002 என்ற தொலைப்பேசி எண்ணில் தொடர்பு கொண்டு பயனடையலாம். மேலும், விவரங்களுக்கு சேலம் மாநகராட்சி மண்டலங்கள் - சூரமங்கலம் - 9750550899, அஸ்தம்பட்டி - 9790602586, கொண்டலாம்பட்டி- 9486932716, அம்மாப்பேட்டை - 6382477379, 9443943353, சேலம் உள்ளுர் திட்டக்குழுமம் - 9750550899, 9790602586, 9443943353.
 ஆத்தூர் / நரசிங்கபுரம் - 9600060321, மேட்டூர் / எடப்பாடி - 9865262047 என்ற செல்லிடப்பேசி எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்திருந்தார். 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT