சேலம்

தம்மம்பட்டியில் போலீஸ் அணிவகுப்பு

4th Sep 2019 09:52 AM

ADVERTISEMENT

தம்மம்பட்டியில் விநாயகர் சதுர்த்தி விசர்ஜன ஊர்வலம் நடைபெற உள்ளதையடுத்து, போலீஸார் செவ்வாய்க்கிழமை அணிவகுப்பை நடத்தினர்.
 விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தம்மம்பட்டி பகுதியில் 43 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இதன் விசர்ஜன ஊர்வலம் வரும் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது.
 அதனையடுத்து, போலீஸார் அணிவகுப்பு சேலம் மாவட்ட எஸ்.பி. தீபா கனிகர் தலைமையில் நடைபெற்றது. இதில் கூடுதல் எஸ்.பி. அன்பு, ஆத்தூர் டி.எஸ்.பி. ராஜீ, தம்மம்பட்டி காவல் ஆய்வாளர் சுப்பிரமணியம் உள்ளிட்ட போலீஸார் 120 பேர் பங்கேற்றனர். தம்மம்பட்டி காவல் நிலையத்தில் தொடங்கிய அணிவகுப்பு உடையார்பாளையம், கடைவீதி, நடுவீதி வழியாக மீண்டும் காவல் நிலையத்தை அடைந்தது.
 
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT