சேலம்

தனியார் பள்ளியில் தனித்திறன் போட்டி

4th Sep 2019 09:51 AM

ADVERTISEMENT

ஆத்தூரை அடுத்துள்ள ஈச்சம்பட்டி ராசி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் இனோவேசன் சேலஞ்ச் என்ற மாணவர்களின் தனித்திறன் போட்டி தலைவர் ஆர். இராஜமாணிக்கம் தலைமையில் நடைபெற்றது.
 நிகழ்ச்சியில் 12 பள்ளிகள் கலந்து கொண்டன. மாணவர்களின் கொல்லாப்ரேசன், கம்யூனிகேசன், கிரியேட்டிவ் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
 இளம் வயதில் மாணவர்களின் படைப்பாற்றல் வெளிக் கொணர்தல் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில், இந்தப் போட்டியில் ஆத்தூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, தம்மம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, சேலம் புனித மைக்கல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆகியோர் அடுத்த நிலைக்குச் சென்றனர்.
 வெற்றி பெற்றவர்களுக்கு ராசி கல்வி நிறுவனங்களின் கல்விக் குழுத் தலைவர் ஆர். கனகராஜன், பொருளாளர் ஈ.எஸ். மணி ஆகியோர் பரிசு வழங்கி பாராட்டினர்.
 நிகழ்ச்சியில் அனைத்து நிர்வாகிகளும் உடனிருந்தனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT