சேலம்

தடகளப் போட்டி: மாண்ட்போர்ட் சமுதாயப் பள்ளி சாம்பியன்

4th Sep 2019 09:53 AM

ADVERTISEMENT

தடகளப் போட்டிகளில் மாண்ட்போர்ட் சமுதாயப் பள்ளி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்றது.
 சேலம் மாவட்டம், கிழக்கு வட்டார அளவில் மாணவ, மாணவியருக்கான தடகளப் போட்டிகள் ஆக. 27, 28 ஆகிய இரு தினங்கள் சேலம் இளம்பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றன.
 இப்போட்டிகளில், ஏற்காடு மாரமங்கலம் ஊராட்சி கொம்புத்தூக்கி கிராமம் கொரவன்காடு மாண்ட்போர்ட் சமுதாயப் பள்ளி மாணவ, மாணவியர் 67 பேர் கலந்துகொண்டனர். மாணவர்கள் பிரிவில் 19 தங்கம், 17 வெள்ளி, 12 வெண்கலம் வென்று 158 புள்ளிகளுடன் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றனர். மாணவியர் பிரிவில் 22 தங்கம், 13 வெள்ளி, 14 வெண்கலம் வென்று 163 புள்ளிகளுடன் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை பெற்றனர்.
 மேல் மூத்தோர், மூத்தோர், இளையோர் பிரிவில் ஹரிகுமார், வேல்முருகன், சுசீந்திரன் தங்கப் பதக்கமும், தனிநபர் சாம்பியன் பட்டமும், பெண்கள் பிரிவில் மேல் மூத்தோர், மூத்தோர் பிரிவில் கிருஷ்ணவேணி, சுதா தனிநபர் சாம்பியன் பட்டமும் பெற்று தங்கப் பதக்கம் வென்றனர்.
 வெற்றிபெற்ற மாணவ, மாணவியருக்கு மாண்ட்போர்ட் சமுதாயப் பள்ளித் தாளாளர் அருள்சகோதரர் ஜார்ஜ் கே.ஜே, அருள்சகோதரர்கள் லாரன்ஸ், அந்தோணி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT