சேலம்

குடிநீர் கோரி சாலை மறியல்

4th Sep 2019 09:50 AM

ADVERTISEMENT

இளம்பிள்ளை அருகே ஏகாபுரம் பகுதியில் குடிநீர் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
 சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகே உள்ள ஏகாபுரம் ஊராட்சிக்குள்பட்ட ஆலைக்குட்டை பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் உள்ள மூன்று ஆழ்துளைக் கிணற்றில் ஒன்றில் மட்டுமே குறைந்தளவில் தண்ணீர் வருவதால், அப்பகுதி மக்களுக்கு குடிநீர் பற்றாக்குறை உள்ளது. இதனையடுத்து, கடந்த 3 மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்ட காவிரி குடிநீர் குழாய் அமைக்கும் பணி கிடப்பில் இருப்பதைக் கண்டித்து, 100-க்கும் மேற்பட்ட பெண்கள் எட்டிகுட்டை மேடு- இளம்பிள்ளை சாலையில் ஆலைக்குட்டை பேருந்து நிறுத்தம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த மகுடஞ்சாவடி காவல் நிலையப் போலீஸார் மற்றும் மகுடஞ்சாவடி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT