சேலம்

ஓய்வூதியத் திட்டத்தில் சேர விவசாயிகளுக்கு அழைப்பு

4th Sep 2019 09:52 AM

ADVERTISEMENT

பாரதப் பிரதமரின் ஓய்வூதியத் திட்டத்தில் சேர விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
 ஆத்தூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பாரதப் பிரதமரின் ஓய்வூதியத் திட்டப் பயன்கள் குறித்த விளக்கக் கூட்டத்தில், வட்டார வேளாண் உதவி அலுவலர் பொ.வேல்முருகன் கூறியது: விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பாரதப் பிரதமரின் விவசாயிகளுக்கான வாழ்நாள் வரையிலான ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
 இத்திட்டத்தில் 18 முதல் 40 வயது வரையிலான சிறு, குறு விவசாயிகள் பதிவு செய்து கொள்ளலாம். இத்திட்டத்தில் பதிவு செய்து, வயதுக்கேற்ப ஒவ்வொரு மாதமும் ரூ.55 முதல் ரூ.200 வரை பொது இ-சேவை மையத்தில் ஓய்வு பெறும் 60 வயது வரை விவசாயிகள் செலுத்த வேண்டும். அதற்கு நிகரான தொகையை மத்திய அரசும் சந்தாதாரர் கணக்கில் செலுத்தும். இத்திட்டத்தில் சேர்ந்த விவசாயிகள் 60 வயதை அடையும் போது, ஓய்வூதியமாக மாதந்தோறும் ரூ.3 ஆயிரத்தை வாழ்நாள் வரை பெறலாம்.
 மேலும், இதுகுறித்த விவரங்களை ஆத்தூர் வட்டார வேளாண் அலுவலகம், பொது இ-சேவை மையத்தை அணுகி தெரிந்து கொள்ளலாம் என தெரிவித்தார்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT