சேலம்

எடப்பாடி அருகே தீர்த்தக்குட ஊர்வலம்

4th Sep 2019 09:53 AM

ADVERTISEMENT

எடப்பாடி அருகே பெருமாள் ஆலய கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை தீர்த்தக்குட ஊர்வலம் நடைபெற்றது.
 எடப்பாடியை அடுத்த கூடக்கல் பகுதியில் மலை மீதுள்ள பாமா, ருக்மணி சமேத மாட்டுப்பெருமான் ஆலயத்தின் புனரமைப்புப் பணிகள் நிறைவுற்ற நிலையில், கோயில் கோபுரங்களுக்கான கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற உள்ளது.
 இதற்கான முன்னேற்பாட்டுப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ஆலயக் கும்பாபிஷேகத்துக்காக, காவிரி ஆற்றிலிருந்து புனித நீர் எடுத்துவரும் தீர்த்தக்குட ஊர்வலம், செவ்வாய்க்கிழமை பூலாம்பட்டி அருகே உள்ள காவிரிக் கரையில் நடைபெற்றது. இதில், விரதம் இருந்து காவிரியில் புனித நீராடி தீர்த்தக் குடங்களை சுமந்து, மாட்டுப்பெருமாள் ஆலயம் நோக்கி ஊர்வலமாக திரளான பக்கர்கள் சென்றனர். முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்ற தீர்த்தக்குட ஊர்வலம், ஆலய வளாகத்தில் நிறைவுற்றது. பக்தர்கள் எடுத்துவந்த தீர்த்தக் குடங்கள் ஆலயத்தின் முன் அமைக்கப்பட்டுள்ள யாக சாலையில் வைக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பின் வியாழக்கிழமை காலை கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதாக விழாக் குழுவினர் தெரிவித்தனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT