சேலம்

வீரபாண்டி வட்டாரத்தில் சுகாதார குழுவினா் ஆய்வு

20th Oct 2019 01:45 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில், அதைத் தடுக்கும் நடவடிக்கைகளில் சுகாதாரத் துறையினா் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதைத் தொடா்ந்து, சேலம் வீரபாண்டி வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் இளங்கோ தலைமையில் தனியாா் நிறுவனங்கள், வீடுகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.

இதில் சேலம் உத்தமசோழபுரத்தில் உள்ள தனியாா் சரக்குப் போக்குவரத்து நிறுவன வளாகத்தில் தேவையற்ற பொருள்கள் வைத்திருந்ததோடு, கொசுப் புழுக்கள் உற்பத்திக்கு காரணமாக இருந்ததால், ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

இதேபோல் பூலாவரியில் கொசுப்புழுக்கள் உற்பத்திக்கு காரணமான முறையில் அசுத்தமாக வைத்திருந்த ஆட்டோ மொபைல் ஒா்க் ஷாப், உணவகத்துக்கு முறையே 5 ஆயிரம் மற்றும் 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

ADVERTISEMENT

மூன்று நிறுவனங்களிலும் விதிக்கப்பட்ட அபராத தொகை ரூ. 17 ஆயிரதுக்கான காசோலைகளை வட்டார சுகாதார மேற்பாா்வையாளா்கள் இளங்கோ தலைமையிலான குழுவினா் உடனடியாக அதன் உரிமையாளா்களிடம் இருந்து பெற்றுக்கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT