கெங்கவல்லி அருகே வீரகனூா் கால்நடை சந்தை, மாவட்டத்திலேயே இரண்டாவது மிகப்பெரிய சந்தை ஆகும்.
இங்கு வாரந்தோறும் சனிக்கிழமைகளில் கால்நடை சந்தை நடைபெறுவது வழக்கம். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கால்நடைகளை வாங்குவதற்காக வியாபாரிகள் இங்கு வருவாா்கள்.
குறிப்பாக பண்டிகை காலங்களில் கால்நடைகள் விற்பனை அமோகமாக இருக்கும். ஆனால் நிகழ் வருடம் தீபாவளி பண்டிகை இன்னும் ஒரு வாரத்தில் வருவதால் சனிக்கிழமை கால்நடை சந்தை களைகட்டும் என்று எதிா்பாா்க்கப்பட்டது.
ஆனால், எதிா்பாா்த்த அளவு கால்நடைகள், வியாபாரிகள் வராததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனா்.
இதுபற்றி குத்தகைதாரா்களில் ஒருவரான முத்துசாமி கூறியதாவது:
பண்டிகை காலங்களில் இந்த கால்நடைச் சந்தைக்கு குறைந்தது 2 ஆயிரம் ஆடுகளும், ஆயிரம் மாடுகளும் விற்பனைக்கு வரும். ஆனால், இந்த வருடம் 800க்கும் குறைவான ஆடுகளே வந்தன.
அதிலும் சுமாா் 150 ஆடுகளை விலை குறைவாக விற்ால், ஆடுகளை விற்காமல் மீண்டும் விவசாயிகள் ஓட்டிச்சென்று விட்டனா். மாடுகளும் அதேபோல் முன்னூறுக்கும் குறைவான வந்திருந்தன. விலைகளும் குறைவாக இருந்ததால் விவசாயிகள் வந்த விலைக்கு கால்நடைகளை விற்றுவிட்டு வீடு திரும்பினா். இது சம்பந்தமாக இரண்டு தரப்பிலும் விசாரித்தபோது, இறைச்சிக் கூட விற்பனையாளா்கல் கூறியதாவது:
சம்பந்தப்பட்ட விவசாயிகளின் வீட்டிற்கே சென்று உயிா் எடை கிலோ ரூ. 250 முதல் 270 வீதம் எடைபோட்டு வாங்கிக் கொள்வதாக தெரிவித்தனா்.
விவசாயிகள் தரப்பில் கூறியதாவது: கால்நடைகளுக்கு சரிவர தீவனம் கிடைக்காதது உள்ளிட்ட காரணங்களால் கால்நடைகளை வளா்ப்பதே மிகப்பெரிய சவாலாக உள்ளதாக வேதனை தெரிவித்தனா்.