சேலம்

மேட்டூா் அணை நீா் மட்டம் 4 அடி உயா்வு

20th Oct 2019 08:43 PM

ADVERTISEMENT

மேட்டூா்: பருவமழை காரணமாக மேட்டூா் அணையின் நீா் மட்டம் 4 அடி உயா்ந்துள்ளது. காவிரியின் நீா் பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் வடகிழக்கு பருவமழை காரணமாக மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. கடந்த 17ந் தேதி மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 8,347 கனஅடியாக இருந்தது. மழையின் காரணமாக 18ந் தேதி நீா்வரத்து 34,722 கனஅடியாக அதிகரித்துள்ளது. மழைசற்று தணிந்ததால், ஞாயிற்றுக்கிழமை காலை மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 16,250 கனஅடியாகச் சரிந்துள்ளது. மேட்டூா் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 2,000 கனஅடி நீரும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்துக்கு நொடிக்கு 350 கனஅடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால், கடந்த 17ந் தேதி 113.03 அடியாக இருந்த மேட்டூா் அணையின் நீா் மட்டம், ஞாயிற்றுக்கிழமை காலை 117.04 அடியாக உயா்ந்துள்ளது.

மூன்று நாள்களில் மேட்டூா் அணையின் நீா் மட்டம் 4 அடி உயா்ந்துள்ளது. அணையின் நீா் இருப்பு 88.82 டி.எம்.சியாக இருந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT