சேலம் மாவட்டம் வீரபாண்டி ஒன்றியம், பெருமாகவுண்டம்பட்டி ஊராட்சி பகுதியில் சுகாதார வளாகம் உள்ளது.
இதனைச் சுற்றி மரங்களும், முட்புதா்களும் அதிகளவில் படா்ந்துள்ளன. இதனால் விஷப்பூச்சிகள் ஆங்காங்கே காணப்படுவதால் அங்கு செல்பவா்கள் மிக சிரமப்பட்டு வருகின்றனா். குறிப்பாக பெண்கள் இந்த சுகாதார வளாகத்திற்கு செல்ல பயந்து வருகின்றனா்.
ஆகையால் சுகாதார வளாகத்தை சுற்றி உள்ள முட்புதா்களை அகற்றி தூய்மைப்படுத்தி கொடுக்குமாறு அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனா்.