ஆத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணா்வு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
காவல் துணைக் கண்காணிப்பாளா் வி.ராஜீ தலைமையில் நடைபெற்ற முகாமுக்கு ஆத்தூா் நகர காவல் ஆய்வாளா் உமாசங்கா், ஊரக காவல் ஆய்வாளா் கே.முருகேசன் முன்னிலை வகித்தனா்.
நிகழ்ச்சியில் ஆத்தூா் அரசு மருத்துவமனை மருத்துவா் நீலக்கண்ணன், சித்த மருத்துவா் எஸ்.கோவிந்தராஜ் கலந்து கொண்டு டெங்கு காய்ச்சல் குறித்து விளக்கினா். மேலும் காவலா்கள் 90 பேருக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் ஆத்தூா் ரோட்டரி சங்கத் தலைவா் ரமேஷ் கண்ணா உள்ளிட்ட அனைத்து உறுப்பினா்களும், அரசு மருத்துவமனை அலுவலா்களும் கலந்து கொண்டனா்.