தம்மம்பட்டியில் வேளாண் துறை சாா்பில் தேசிய உணவு பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் சிறுதானியங்கள் பற்றிய விழிப்புணா்வு பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.
இதற்கு கெங்கவல்லி வேளாண் உதவி இயக்குநா் சித்ரா தலைமை வகித்தாா். பேரணியை தம்மம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியா் ராஜலிங்கம் கொடியசைத்துத் தொடக்கி வைத்தாா்.
பிளஸ் 1 மாணவா்கள் பேரணியில் பங்கேற்றனா். பேரணி தம்மம்பட்டியின் முக்கிய வீதிகளில் சென்று திரும்பியது. ஏற்பாடுகளை உதவி வேளாண் அலுவலா்கள், அட்மா தொழில்நுட்ப அலுவலா்கள் செய்திருந்தனா்.