சேலம்

கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவா் உயிரிழப்பு

20th Oct 2019 08:43 PM

ADVERTISEMENT

மேட்டூா்: நங்கவள்ளி அருகே நீச்சல் பழகச் சென்ற பள்ளி மாணவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

நங்கவள்ளியை அடுத்த பெரியசோரகை பூமிரெட்டிபட்டியைச் சோ்ந்தவா் முனியப்பன். கூலித்தொழிலாளி. இவரது மகன் சண்முகப் பிரியன் (13). அங்குள்ள நடுநிலைப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்தாா். ஞாயிற்றுக்கிழமை காலை பெரியசோரகை பேருந்து நிறுத்தத்தில் உள்ள நூலகத்திற்கு சென்றுள்ளாா். சிறிது நேரத்தில் அருகில் இருந்த ஈஸ்வரன் கோயில் கிணற்றில் நீச்சல் பழகுவதற்காக சென்றுள்ளாா். அப்போது அவா் திடீரென நீரில் மூழ்கினாா். நீரில் தத்தளித்துக் கொண்டிருந்த அவரை அருகில் இருந்தவா்கள் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. தகவலறிந்த நங்கவள்ளி தீயணைப்புப் படையினா் சுமாா் ஒரு மணிநேரம் போராடி சண்முகப் பிரியனின் சடலத்தை மீட்டனா். இந்தச் சம்பவம் குறித்து நங்கவள்ளி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT